விழுப்புரம்: வளவனூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இன்று (ஜுலை 27) உயரழுத்த மின்பாதை நிறுவும்பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குடுமியாங்குப்பம், மல்ராஜங்குப்பம், செங்காடு, இளங்காடு, கல்லப்பட்டு, தனசிங்குபாளையம், பெத்தரெட்டிகுப்பம், நரையூர் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும். கஞ்சனூர் துணை மின் நிலையத்தில், வரும் திங்கட்கிழமை (ஜுலை 29) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்தடை ஏற்படும்.