மேஷம்: இன்று உங்களுக்கு பணவரவு மகிழ்ச்சி தரும். நண்பர்களின் சந்திப்பு ஆதாயமாக இருக்கும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
ரிஷபம்: சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. சகோதர வகையில் இருந்து கருத்து வேறுபாடுகள் மாறி, சுமுகமான உறவு ஏற்படும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் தேவையான உதவியும் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் முன்னெச்சரிக்கை அவசியம்.
மிதுனம்: பணவரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் அளவாகவே இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பழைய கடன்களைத் தந்து முடிக்க வாய்ப்பு ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாகும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
கடகம்: குடும்பத்தில் கணவன் - மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவைப் பொறுத்தவரை பிரச்னை இல்லை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவதில் சற்று அலைச்சல் ஏற்படும். சிலருக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
சிம்மம்: பொருளாதார வசதி நல்லபடியே இருக்கும். கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் கடன்வாங்காமல் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம், கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் தீர்ந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு பிரசித்தி பெற்ற ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
கன்னி: கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த சண்டைகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் எண்ணப்படி நடந்துகொள்வார்கள். தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்து, மகிழ்வீர்கள். சகோதரர் நீங்கள் கேட்ட உதவியை செய்து தருவார். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
துலாம்: ஆரோக்கியம் மேம்படும். தேவையான பணவரவு கிடைக்கும். சிலருக்கு வீண்செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக் கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச்செல்வதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். நீண்டநாளாகச் செல்ல நினைத்த புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
விருச்சிகம்: பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வகையில் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். சிலருக்குச் சிறிய அளவில் ஆரோக்கியம் பாதித்தாலும் உடனே சரியாகிவிடும். கணவன் -மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தந்தையின் மூலம் பணவரவுக்கு வாய்ப்புண்டு.
தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், போதுமான பணவரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். நீண்டநாளாக சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளின் திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்ல வரன் அமைய வாய்ப்பு உள்ளது. அரசுக் காரியங்களில் இழுபறியே காணப்படும்.
மகரம்: வருமானத்துக்குக் குறைவிருக்காது. உறவினர்கள் வருகை வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தி கிடைக்கும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். தந்தையுடன்
விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
கும்பம்: புதிய முயற்சிகள் இழுபறியாக இருந்தாலும் சாதகமாக முடியும். நீண்டநாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெற வாய்ப்பு உண்டு. திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வாரப் பிற்பகுதியில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
மீனம்: குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பணவரவுக்குக் குறைவிருக்காது. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சகோதரர்கள் உதவிகேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்புண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.