சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் ஜெயந்தி இன்று

62பார்த்தது
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் ஜெயந்தி இன்று
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தையாக போற்றப்படும் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் ஜெயந்தியை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடுகிறோம். பாபாசாகேப் என்று அழைக்கப்படும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் பிறந்தார். இவர் ரஞ்சி மாலோஜி சக்வால், பீமாபாயின் 13வது குழந்தை. அம்பேத்கர் அரசியல் சட்டத்தை எழுதி மக்களின் தேவைகளையும் உரிமைகளையும் எடுத்துரைத்து பலருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த மாபெரும் தலைவர் ஆவார்.

அம்பேத்கரின் தொலை நோக்கு சிந்தனையையும், அடித்தட்டு மக்களின் உரிமைக் காவலனாக விளங்கிய கொள்கைகளையும் இந்நாடு என்றும் மறவாது.

தொடர்புடைய செய்தி