பாடகி பவதாரிணியின் பிறந்த நாள் இன்று

62பார்த்தது
பாடகி பவதாரிணியின் பிறந்த நாள் இன்று
இசைஞானி இளையயராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி கல்லீரல் புற்றுநோய் காரணாமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் சிகிச்சையில் இருந்தபோது உயிரிழந்தார். இவரது உடலுக்கு பல்வேறு பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து இவரது உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் பவதாரிணிக்கு இன்று பிறந்த நாள் என அவரது சகோதரரும் இயக்குனருமான வெங்கட்பிரபு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கச்சி. எங்களுக்கு தெரியும் நீ மகிழ்ச்சியான இடத்தில் இருப்பாய் என்று. நாங்கள் அனைவரும் உன்னை இழந்து தவிக்கிறோம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி