இந்தியாவில் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டியவர்கள் மூத்த குடிமக்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் இந்த சமுதாயத்திற்கு நிறைய பங்களிப்பை வழங்குகின்றனர். அன்பு மற்றும் கருணையுடன் வாழ்க்கையை நடத்துவதன் முக்கியத்துவத்தை கற்பிக்கின்றனர். வறுமையிலும் எப்படி வாழ்வது என்பதை நமக்கு காட்டுகின்றனர். சமூகத்திற்கு அவர்கள் தரும் பங்களிப்பை கொண்டாடும் வகையில் ‘உலக மூத்த குடிமக்கள் தினம்’ ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 21-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.