நண்பரின் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த +2 மாணவர் உட்பட 2 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் மணலூர்பேட்டையைச் சேர்ந்த தனுஷ் குமார் (17), லோகேஷ் சேர்ந்து நண்பரின் பிறந்தநாளுக்கு பேனர் வைத்தனர். அப்போது, டிரான்ஸ்பார்மரை கவனிக்காததால் பேனர் மின்கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்து 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.