பெற்றோரை இழந்த பெண்ணுக்கு நிதி உதவி

64பார்த்தது
பெற்றோரை இழந்த பெண்ணுக்கு நிதி உதவி
திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் ஒன்றியம், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த சம்பத் அவர்களின் மகள் கீதா, தாய் தந்தையை இழந்த நிலையில் தற்போது அவர் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு திருமணம் ஏற்பாடு நடைபெறுகிறது. அதை அறிந்த திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருமான தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் நிதி உதவி அளித்தனர். இந்நிகழ்வில் வந்தவாசி நகர செயலாளர் தயாளன், வந்தவாசி மதிய ஒன்றிய செயலாளர் பெருமாள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன், வந்தவாசி டாக்டர். கோகுல், ராதா திமுக கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி