புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு

64பார்த்தது
புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு தாக்கி மூதாட்டியும், அவரது மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே போல் காப்பாற்றச் சென்ற மற்றொரு 15 வயது சிறுமியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். புதுநகரில் உள்ள கழிவுநீர் சுத்தீகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியான வாயு, வீடுகளின் கழிவறை வழியாக வெளியேறிய நிலையில், இன்று காலை கழிவறைக்கு சென்ற மூதாட்டி மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்ற சென்ற மகள் காமாட்சியும் மயங்கி விழுந்தார். உடனே இவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே உயிரிழந்தனர். தற்போது அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி