தொழிலதிபருக்கு மிரட்டல்.. எம்.பி., மீது வழக்குப்பதிவு

57பார்த்தது
தொழிலதிபருக்கு மிரட்டல்.. எம்.பி., மீது வழக்குப்பதிவு
பீகாரில் பூர்னியா எம்.பி., பப்பு யாதவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பர்னிச்சர் வியாபார நிறுவனம் நடத்தும் தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் தன்னை வீட்டுக்கு வரவழைத்து ரூ.1 கோடி பணம் கேட்டதாக தொழிலதிபர் புகாரில் கூறியுள்ளார். பப்பு யாதவ் மீது பூர்னியா மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்னும் பதவி கூட ஏற்காத எம்.பி., போலீஸ் வலையில் விழுந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி