இடைத்தேர்தல் - நாதக தனித்துப் போட்டி

52பார்த்தது
இடைத்தேர்தல் - நாதக தனித்துப் போட்டி
விக்கிவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சுமார் 35 லட்சம் வாக்குகளுடன் 8.19% பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது நாதக. மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற பின் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் நாதக தனித்து களம் காண்கிறது. விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகளை தொடங்க சீமான் திட்டமிட்டுள்ளார்.

திமுக எம்.எல்.ஏ. நா.புகழேந்தி மறைவை தொடர்ந்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற ஜுலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி