முல்லைப்பெரியாறு அணையில் ஜூன் 13, 14ம் தேதி ஆய்வு!

60பார்த்தது
முல்லைப்பெரியாறு அணையில் ஜூன் 13, 14ம் தேதி ஆய்வு!
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ம் தேதி இருநாட்கள் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு செய்ய உள்ளது. மத்திய நிர்வாக ஆணைய தலைமை பொறியாளர் விஜய் சரண் தலைமையிலான குழு முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. மக்களவைத் தேர்தலால் ஒத்திவைக்கப்பட ஆய்வு வரும் ஜூன் 13-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க இக்குழு ஆய்வு செய்ய உள்ளது.