டிடிபி, ஜேடியு சபாநாயகர் பதவியை கேட்க வேண்டும்: ஆதித்யா தாக்கரே

71பார்த்தது
டிடிபி, ஜேடியு சபாநாயகர் பதவியை கேட்க வேண்டும்: ஆதித்யா தாக்கரே
மக்களவை சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் மற்றும் ஜேடியு கட்சிகள் கேட்காவிட்டால், அந்த கட்சிகள் பிளவுபடும் என சிவசேனா (யுபிடி) கட்சி தலைவர் ஆதித்யா தாக்கரே பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். ஆந்திராவும், பீகாரும் சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி பெற விரும்பினால், இப்போதுதான் சரியான நேரம் என்றும், பின்னர் அதற்கு வாய்ப்பில்லை என்றும் ஆதித்யா தெளிவுபடுத்தினார். இந்த கூட்டணி அரசு நீண்ட காலம் நீடிக்காது என்று பல தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் இருந்த சிவசேனா இரண்டாக உடைந்து அக்கட்சியை ஏக்நாத் ஷிண்டே கைப்பற்றானர். உத்தவ் தாக்கரே தலைமையில் இருந்த அணிக்கு சிவசேனா (யுபிடி) என்ற அடையாளத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது.

தொடர்புடைய செய்தி