திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் உள்ள ஏரியை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணி நடைபெறுவதால் அதனை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மற்றும் தேவனந்தல் புனல்காடு பகுதியில் அமையவுள்ள குப்பை கிடங்கை தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு நேரில் சென்று பார்வையிட்டார்.
உடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திமுக மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர். எ. வ. வே. கம்பன், திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.