மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் காலை வேளையில் வெயில் சுட்டெரித்தாலும், மாலை வேளையில் பரவலாக மழை பெய்து வருகிறது.