திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் 2025 புதிய ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி மாலை முதல் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பங்குத்தந்தை அருட்பணி சகாய பிரான்சிஸ் பின்டோ தலைமை தாங்கி சிறப்பு திருப்பலியை நடத்தி வைத்தார். இந்நிகழ்வில் போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அத்திமூர், ஜடதாரிகுப்பம், வசூர், குன்னத்தூர், இரெண்டேரிப்பட்டு, மாம்பட்டு, கரைப்பூண்டி, வெண்மணி, திண்டிவனம், பெலாசூர், சனிக்கவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான கிறிஸ்தவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு உலக மக்கள் நன்மைக்காக கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
புதிய ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு தூய இருதய ஆண்டவர் தேவாலயம் மின்னொலியால் ஜொலித்தது. மேலும் தேவாலயத்தினுள் வண்ண வண்ண காகிதங்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன குறிப்பிடத்தக்கது. மேலும் அதனைத் தொடர்ந்து புதிய வருடப்பிறப்பான ஜனவரி ஒன்றாம் தேதி காலையிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து ஒருவருக்கு ஒருவர் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் குறிப்பிடத்தக்கது.