திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் 14 வது செயற்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் தமிழன் மு. ஜெகன் தலைமையில் இன்று (செப் 29) நடைபெற்றது.
இந்நிகழ்வில் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் நற்பவி கோபி, சங்கத்தின் தேசிய செயலாளர் அன்சாரி செந்தில், பொருளாளர் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அரி கிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவி மகேஸ்வரி கண்ணன், திருவண்ணாமலை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முனுசாமி, போளூர் நகர செயலாளர் முத்துக்குமார், திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.