ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் கோட்டாட்சியா் ஆய்வு.

65பார்த்தது
ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் கோட்டாட்சியா் ஆய்வு.
போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடி வெள்ளித் திருவிழாவையொட்டி நடைபெற்று வந்த, தற்காலிக பேருந்து நிறுத்தம், வாகன நிறுத்தம் அமைத்தல், சாலையோரக் கடைகள் அகற்றுதல் என பல்வேறு பணிகளை கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

படவேடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடி வெள்ளி பெருவிழா, வெள்ளிக்கிழமை முதல் தொடா்ந்து 7 வாரம் வெள்ளிக்கிழமை விழா நடைபெறும்.

இந்த விழாவில் இரவு தோறும் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறும். மேலும், வாணவேடிக்கை, இன்னிசை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கோயிலுக்கு திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், திருச்சி, தருமபுரி, கோவை, சென்னை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து பொங்கலிட்டு, மொட்டை அடித்து வேண்டுதல் நிறைவேற்றிச் செல்வா்.

இதனால் பக்தா்களின் தேவைக்காக அடிப்படை வசதிகளான குடிநீா், சாலை வசதி, பக்தா்கள் தங்கும் கூடம், பொங்கல் வைக்கும் இடம், தற்காலிக பேருந்து நிறுத்தம், வாகன நிறுத்தம் அமைத்தல், சாலையோரக் கடைகள் அகற்றம் என பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன.

இந்தப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதை, ஆரணி கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தொடர்புடைய செய்தி