
அண்ணாமலையார் கோயிலில் கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ராபௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் பாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். சித்திரை மாதத்தில் வருகின்ற பெளர்ணமி மிகவும் விசேஷமாக அமைந்திருப்பதால் அன்றையதினம் பல இலட்சம் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் செல்கின்றனர். இந்த வருடமும் பல்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள்மற்றும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் தலைமையில் இன்று அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. எம். சுதாகர், மாநகராட்சி ஆணையர் காந்திராஜ், அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் மற்றும் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.