கீழ்பென்னாத்தூர் - Kilpennathur

திருவண்ணாமலை: துணை முதல்வர் வருகை; ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி, அனைத்துத் துறைகள் சாா்பில் செய்ய வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா. இராம்பிரதீபன், செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் பேசியதாவது: தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளி, சனி (ஆக்டோபா் 18, 19) ஆகிய தினங்களில் காா்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறாா். மேலும், அரசுத் துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறாா். எனவே, அனைத்துத் துறை அலுவலா்களும் தங்கள் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த விவரங்களை சமா்ப்பிக்க வேண்டும். மேலும் சனிக்கிழமை தமிழக துணை முதல்வா் தலைமையில் விளையாட்டு வீரா்களுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செய்ய வேண்டும் என்றாா்.

வீடியோஸ்


திருவண்ணாமலை
இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி - ஆளுநர் பரபரப்பு பேச்சு
Oct 18, 2024, 11:10 IST/

இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி - ஆளுநர் பரபரப்பு பேச்சு

Oct 18, 2024, 11:10 IST
இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க கடந்த 50 ஆண்டுகளில் பலமுறை முயற்சி நடந்ததாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள டிடி தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று நடந்துவரும் இந்தி தின விழாவில் உரையாற்றிய ஆளுநர், நாட்டின் பெருமைமிகு மாநிலமான தமிழ்நாட்டை எப்போதும் இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாது என்றார். மேலும், தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படவில்லை என்றும், தமிழ் மக்களிடம் இந்தி கற்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.