திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள சந்தன கொட்டாய் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதையொட்டி மங்கள இசை, கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.
இதில் வேதமந்திரங்கள் முழங்க, யாக பூஜை நடைபெற்றன. இதனை தொடர்ந்து கலசத்தை குருக்கள் தலை மீது சுமந்தபடி மேள தாளங்கள் முழங்க கோவிலை வலம் வந்து கோபுர கலசத்திற்கு எடுத்துச் சென்றார். கலசத்தின் மேல் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். பின்னர் கோவில் சன்னதியில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டு, மாரியம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.