தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய அலுவல் தொடங்கிய நிலையில் அமைச்சர்கள் மீது அதிமுக கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுக்க வேண்டும் என அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சபாநாயகர் அனுமதி மறுத்தார். பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்றுதான் கூறியுள்ளோம், கூட்டணி அரசு எனக்கூறவில்லை” என்றார்.