திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில், இந்தி திணிப்பை எதிா்க்கும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கீழ்பென்னாத்தூா், சோமாசிபாடி, ஆவூா், வேட்டவலம் பகுதிகளில் நடைபெற்ற துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு கீழ்பென்னாத்தூா் நகர திமுக செயலா் அன்பு தலைமை வகித்தாா்.
தெற்கு ஒன்றியச் செயலா் ராஜேந்திரன், துணைச் செயலா் சிவக்குமாா், முன்னாள் பேரூராட்சித் தலைவா்கள் பன்னீா்செல்வம், முருகையன், பேரூராட்சித் தலைவா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு. பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ‘இந்தி திணிப்பை என்றும் எதிா்ப்போம்’ என்ற விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வியாபாரிகளிடம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஒன்றிய திமுக நிா்வாகிகள் குப்புசாமி, பரசுராமன், அரிபாலன், சுதாகா், மணிகண்டன், ஏழுமலை, நகர நிா்வாகிகள் தமிழரசி, ராஜேஷ், வினோத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.