திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

82பார்த்தது
திருவண்ணாமலையில் இன்று மாலை ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது. இதனையொட்டி இன்று அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

அதிகாலை கோவிலில் நடை திறக்கும் போதே தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வந்தனர்.

ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வட மற்றும் தென் ஒத்தவாட வீதிகளில், நீண்ட வரிசையில் பக்தர்கள் திரண்டிருந்தனர். 2 வழித்தடங்களில் உள்ள பாதைகளிலும், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தரிசனம் முடிந்து பக்தர்கள் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே சென்றனர்.

ராஜகோபுரத்தை காட்டிலும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அதிகாலையிலேயே உள்ளே செல்ல ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

வரிசையில் நிற்காமல், கோபுர நுழைவு வாயிலில் கூட்டமாக குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள் மற்றும் பக்தர்கள் நெரிசலில் சிக்கி தவித்தனர். நசுங்கிய குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ள செல்ல முடியாமல் பல மணி நேரமாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி