அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

76பார்த்தது
அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா
செங்கத்தை அடுத்த மணிக்கல் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் புவனேஸ்வரி தலைமை வகித்தாா். மணிக்கல் ஊராட்சி மன்றத் தலைவா் சிவஞானம், துணைத் தலைவா் பாஞ்சாலை, ஊா் கவுண்டா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் பொ்னாட்ஷா வரவேற்றாா்.

செங்கம் வட்டாரக் கல்வி அலுவலா் ஷகிலா விழாவைத் தொடங்கிவைத்து மாணவா்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முருகன், ஆசிரியா் பயிற்றுநா்கள் சங்கா்நாத், பிரபாகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி