கல்வராயன்மலை: 2000 கிலோ வெல்லம் பறிமுதல், ஒருவர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, நேரடி தலைமையில் மதுவிலக்கு அமாலாக்கபிரிவு காவலர்கள் கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை பகுதியில், தேடுதல் வேட்டை நடத்தியபோது சாராயம் காய்ச்ச பயன்படும் சுமார் 2, 000 கிலோ வெல்லம், 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அதை மறைத்துவைத்திருந்த குபேந்திரன் என்பவரை கைது செய்தனர்.