சின்னசேலம் அடுத்த அம்மையகரத்தை சேர்ந்தவர் பிச்சைக்காரன் மகன் ஸ்டாலின், (23); கூலித்தொழிலாளி. இவர் கடந்த 15ம் தேதி காலை 10. 30 மணியளவில் அம்மையகரம் பஸ்நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது, அதே திசையில் வந்த ஆட்டோ, ஸ்டாலின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஸ்டாலினை அருகிலிருந்தவர்கள் மீட்டு சின்னசேலம் தனியார் மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்டாலின் நேற்று(செப்.17) உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.