நாமும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களையும் மகிழ்விக்க வேண்டுமென்ற உங்களது ஆசையை எப்போதும் நிறைவேற்றுவோம் என்று மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனின் மகளும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் குறிப்பில், தமிழ் கற்றதனால் தான் தமிழ் பேசவில்லை" என்றும் "தமிழ் என்னை பெற்றதனால் தமிழ் பேசுகிறேன்" என பெருமையாக பேச வைத்த தந்தை, தனது அம்மாவோடு இரண்டறக் கலந்துவிட்டார். "மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா" எனத் தெரிவித்துள்ளார்.