3 நாட்கள் கட்டணமில்லா தரிசனம்

64பார்த்தது
திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக 10ஆம் தேதி முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வடிவமும் அதனை தொடர்ந்து வெள்ளி தேரோட்டம் நடைபெறுகிறது. 11ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இது குறித்து சட்டப்பேரவையில் பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களுக்கு அனைத்து விதமான கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி