காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன் (93) உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை விருகம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் பிரிந்தது. 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். காகாதேக என்கிற கட்சியின் நிறுவனர், எழுத்தாளர், தமிழ் ஆர்வலர் என பன்முக திறமையுடன் அறியப்பட்டு வந்த குமரி ஆனந்தனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.