தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 14ஆம் தேதி சித்திரை முதல் தேதியில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. இதற்காக 11ஆம் தேதி மாலையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மீண்டும் 14ஆம் தேதியில் இருந்து மறுமார்க்கமாகவும் பேருந்துகள் இயக்கப்படும்.