திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே விண்ணுவாம்பட்டு கிராமத்தில் 14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை எம்எல்ஏ பெ. சு. தி. சரவணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் திமுக ஒன்றிய செயலாளர்கள் சிவகுமார், வழக்கறிஞர் சுப்பிரமணியன், யூனியன் சேர்மன் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், திமுக கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.