திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பெ. சு. தி. சரவணன் தலைமையில், தமிழக துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து,
கலசபாக்கம் பஜார் வீதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வழங்கினார்கள். உடன், கலசப்பாக்கம் ஒன்றிய கழக செயலாளர்கள் சுப்ரமணியன், சிவக்குமார், ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.