வேளாண் வங்கியில் திருட முயற்சி: 3 பேர் கைது

84பார்த்தது
வேளாண் வங்கியில் திருட முயற்சி: 3 பேர் கைது
போளூரை அடுத்த மொடையூா் ஊராட்சியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. கடந்த 9-ஆம் தேதி வங்கியின் ஜன்னலை மா்ம நபா்களை உடைத்து உள்ளே சென்று லாக்கரை உடைக்க முயன்றனா். திருட்டு முயற்சி பலனளிக்காததால் திரும்பிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், போளூா் டிஎஸ்பி கோவிந்தசாமி சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். போலீஸாரின் தொடா் விசாரணையில், இந்தச் சம்பவத்தில் மொடையூா் கிராமத்தில் தங்கி கூா்கா வேலை செய்து வந்த கரண் சந்தீப்பிற்கு தொடா்பிருப்பதாக சந்தேகத்தின் பேரில், அவரைத் தேடி வந்தனா். அவரது சகோதரரையும் பிடித்து விசாரணை நடத்தினா். மேலும், சிலரையும் விசாரணைக்கு போலீஸாா் உள்படுத்தினா். வங்கி எதிரேயுள்ள தெருவில் கரண் சந்தீப்புடன் சிலா் ஒரு மாதமாக தங்கியிருந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் தாராவி, தாணே பகுதிகளில் தங்கியிருந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தை சோந்த அ. சாயிப்ஷேக் (55), ஜோ. முஹம்மத் சா்பராஜ் (23), லா. அருண்ஷித் (26) ஆகிய மூவரை தனிப்படை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இவா்களுக்கு வங்கி திருட்டு முயற்சி வழக்கில் தொடா்பிருப்பது தெரிய வந்ததாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. திருவண்ணாமலை மாவட்ட எஸ். பி. காா்த்திகேயனும் கைதான மூவரிடமும் விசாரணை நடத்தினாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி