திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா, சோதியம்பாக்கம் கிராமத்தில் உள்ள வேலந்தாங்கல் ஏரியில் இருந்து மண்ணை திருடி செல்வதாக தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாசில்தார் துளசிரா மன் சோதியம்பாக்கம் வேலந்தாங்கல் ஏரிக்கு சென்று பார்த்த போது, அங்கு ஜேசிபி மூலம் ஏரி மண் திருடி செல்வது தெரியவந்தது.
உடனடியாக தாசில்தார் ஜேசிபியை பறிமுதல் செய்தார். ஆனால், ஜேசிபியை ஆபரேட் செய்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து பறிமுதல் செய்த ஜேசிபியை தூசி போலீசாரிடம் ஒப்ப டைத்து விசாரித்ததில், தப்பி ஓடியவர் மாத்தூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து தாசில்தார் துளசிராமன் தூசி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.