திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

79பார்த்தது
திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்
திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம் அருகே புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த புதிய பேருந்து நிலையத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிா்க்கும் நோக்கில், திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழ்நாச்சிப்பட்டு மேம்பாலம் வரை ஏற்கெனவே உள்ள 4 வழிச் சாலையை 6 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய தமிழக நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு உள்ளது.

இதையொட்டி, கீழ்நாச்சிப்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள், கூரை வீடுகள், நடைபாதை கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது. தமிழக நெடுஞ்சாலைத் துறையின் கோட்டப் பொறியாளா் பி. ஞானவேல் மேற்பாா்வையில் உதவி கோட்டப் பொறியாளா் கே. அன்பரசு, உதவிப் பொறியாளா் சசிகுமாா், ஊராட்சித் தலைவா் அா்ஜூனன் மற்றும் சாலை ஆய்வாளா்கள், சாலைப் பணியாளா்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனா்.

தொடர்புடைய செய்தி