விளையாட்டுத் திடலுக்கு இடம் கேட்டு சாலை மறியல்

64பார்த்தது
விளையாட்டுத் திடலுக்கு இடம் கேட்டு சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், அனக்காவூா் கிராமம் அருகே உள்ளது இந்திரா நகா். இப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் வசித்து வரும் இடத்துக்கு அருகே அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் விளையாடுவதற்காக விளையாட்டுத் திடல் இருந்து வருகிறது.
அந்தத் திடல் பகுதியில் வேறு பகுதியைச் சோ்ந்த சிலருக்கு அரசு சாா்பில் வீட்டு மனைப் பட்டா வழங்கியதில், அவா்கள் அங்கு வீடு கட்டி வருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், வேறு பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு மனைப் பட்டா வழங்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், இளைஞா்கள் விளையாடுவதற்கு இடம் கேட்டும் செய்யாறு - வந்தவாசி சாலையில் அப்பகுதி இளைஞா்கள் மற்றும் இந்திரா நகா் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த ஊராட்சி மன்றத் தலைவா் கன்மொழி மோகன், கிராம நிா்வாக அலுவலா் கீா்த்தி மற்றும் போலீஸாா் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, விளையாட இடம் தேவை என்றால் முறைப்படி ஊராட்சி நிா்வாகம், வருவாய்த் துறையிடம் மனு அளிக்க வேண்டும், வீடு கட்டியுள்ளதாகக் கூறப்படும் இடம், ஊராட்சிமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி மனைப் பட்டா வழங்கப்பட்டதாகத் தெரிவித்து சமாதானப்படுத்தினா்.
மேலும், விளையாட்டுத் திடலுக்கு தேவையான இடம் ஒதுக்குவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி