திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர காவல் நிலையத்தில் பதிவேடுகள் மற்றும் பராமரிப்புகள் குறித்து இன்று (21. 02. 2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர், புகார் மனுக்களை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.