திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திடீர் ஆய்வு

59பார்த்தது
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சேத்துப்பட்டு ஆதி திராவிட நலத்துறை மாணவர்கள் விடுதியினை திடீர் ஆய்வு மேற்கொண்டார்

திடீர் ஆய்வின் போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் தரங்கள் குறித்தும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார்

மாணவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளான மருத்துவ முதலுதவி மருத்துவ பெட்டகம் பார்வையிட்டு காலாவதி ஆகாத மருந்துகள் இருப்பு இருக்கிறதா என்பதை பார்வையிட்டு மாணவர்களுக்காக வைக்கப்பட்ட புகார் பெட்டி சரி வர பராமரிக்கப்படாமல் இருப்பதை எச்சரிக்கையும்,
சமையல் கூடங்களை சுத்தமாக தூய்மைப்படுத்த அறிவுறுத்தினார் மேலும் தினம்தோறும் சுத்தப்படுத்தும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை மக்கா குப்பைகளை மாணவர்களிடத்திலே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியினை தவிர்த்து பூமி மாசுபடுவதை கட்டுப்படுத்த எதிர்கால தலைமுறையினர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்துமாறு கூறினார் மேலும் விடுதி காப்பாளர்கள் கண்காணித்து அவர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி