தி.மலை: சிபிஎஸ்இ பள்ளியில் மாணவா்களுக்கு தனித்திறன் போட்டிகள்

64பார்த்தது
தி.மலை: சிபிஎஸ்இ பள்ளியில் மாணவா்களுக்கு தனித்திறன் போட்டிகள்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பிங்க்ஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு தனித்திறன் போட்டிகள் நடைபெற்றன. இதில் செய்யாறு, ஆரணி, கண்ணமங்கலம், வேலூா், செங்கம், போளூா், சேத்துப்பட்டு, கலசப்பாக்கம் போன்ற பகுதிகளைச் சோ்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஜீனாபெட்ஸி வரவேற்றாா். சீனியா் செகண்டரி பள்ளி முதல்வா் இந்துமதி பள்ளியின் கல்வி செயல்பாடுகள் குறித்துப் பேசினாா்.

பின்னா் தனித்திறன் போட்டி முடிந்ததும் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிறைவில் பள்ளியின் கூடுதல் தாளாளா் சித்ரா ரமேஷ் நன்றி கூறினாா்.

தொடர்புடைய செய்தி