நாமக்கல்: ராசிபுரத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்த போது ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே திடீரென பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது. ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை சாலையோரமாக நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விவகாரத்தில் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் உள்ளிட்ட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.