மாநில சுயாட்சி குறித்த விவாதத்தின் மீது, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கருத்து சொல்லாமல் வெளிநடப்பு செய்தது கவலையளிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய ஸ்டாலின், "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவருமே தமிழ்நாட்டு உரிமைகளை விட்டுத்தர முடியாது என்று கூறி, திமுக அரசின் சில நிலைப்பாடுகளுக்கு ஆதரவு தந்துள்ளனர். ‘கொள்கை வேறு கூட்டணி வேறு’ என்று கூறுவார்கள். இதுதான் அவர்களின் கொள்கையா? என்ற கேள்வி எழுகிறது" என்று கூறியுள்ளார்.