நடிகர், இயக்குநர் எஸ்.எஸ். ஸ்டான்லியின் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது நினைவுகள் குறித்து கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொண்ட இயக்குநர் சசி, "பேசமுடியாத சூழலில் இருக்கிறேன். நண்பர் ஸ்டான்லி, 30 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு பழக்கம். அருமையான மனிதர். நேற்று கூட அவருடன் பேசினேன். நன்றாக பேசினார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை" என்றார்.