ரீ-ரிலீஸ் செய்யப்படும் விஜயகாந்தின் 100-வது படம்

51பார்த்தது
ரீ-ரிலீஸ் செய்யப்படும் விஜயகாந்தின் 100-வது படம்
விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான படம் 'கேப்டன் பிரபாகரன்'. இது விஜயகாந்தின் 100-வது படமாகும். இப்படத்தின் மூலம் தான் விஜய்காந்திற்கு 'கேப்டன்' என்ற அடைமொழி கிடைத்தது. இந்த நிலையில், கேப்டன் பிரபாகரன் படம் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதாவது இப்படம் 4 கே தரத்தில் டிஜிட்டல் முறையில் வெளியாக உள்ளது. முருகன் பிலிம் பேக்டரி மற்றும் ஸ்பேரோ சினிமாஸ் சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ளார்.

தொடர்புடைய செய்தி