வட வீதி சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு பூஜை

70பார்த்தது
வட வீதி சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு பூஜை
திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே உள்ள வடவீதி சுப்பிரமணியர் ஆலயத்தில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை முதல் முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மூலவர் பாலமுருகன் சந்தனகாப்பு அலங்காரத்ததில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம் செய்து சென்றனர். இதில் முருகர் பக்தர்கள் தங்களின் நேர்த்திகடனை தீர்க்க பால் காவடி, பன்னீர் காவடி, எடுத்து திருவண்ணாமலை மாடவீதியில் வீதி உலா வந்து முருகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி