தையல்கலை தொழிலாளா்கள் சங்கத்தினா் மனு கொடுக்கும் இயக்கம்

52பார்த்தது
தையல்கலை தொழிலாளா்கள் சங்கத்தினா் மனு கொடுக்கும் இயக்கம்
தையல் இயந்திரம் வழங்கக் கோரி, தையல்கலை தொழிலாளா்கள் சங்கத்தினா் வந்தவாசி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தினா். இயக்கத்துக்கு சங்க நகரச் செயலா் ஜீனத் தலைமை வகித்தாா். சங்க பொதுச் செயலா் எம். வீரபத்திரன், மாவட்டக்குழு உறுப்பினா் அ. அப்துல்காதா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தையல் இயந்திரம் வழங்கக் கோரி, கடந்த 2 ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், உடனடியாக தையல் இயந்திரம் வழங்கக் கோரியும் சங்கத்தினா் முழக்கங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து, தையல் இயந்திரம் வழங்கக் கோரி, வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாணிக்கவரதனிடம் சங்கத்தினா் மனு அளித்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி