சந்தவாசல் அடுத்த படவேடு வீரக்கோயில் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது. அதில் ஒன்பதாம் நாள் நாளான இன்று போத்தராஜாமங்கலம் கிருஷ்ணா தெருக்கூத்து நாடக மன்ற குழுவினரால் போர் மன்னன் சண்டை என்னும் சங்கவதி திருக்கல்யாணம் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது இதில், திரளான மக்கள் கலந்து கொண்டு தெருக்கூத்து நாடகத்தை கண்டு களித்தனர்.