உடுமலை அடுத்த பள்ளபாளையம் ஊராட்சி திருமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (45). இவரது கணவர் செந்தில்குமார்(50) கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் முன் தினம் மாரியம்மாள் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். இதை சாதகமாக கொண்ட மர்ம ஆசாமி அவரை கொலை செய்து விட்டு தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. இரவு சுமார் 8. 30 மணியளவில் வீட்டுக்கு வந்த அவரது கணவர் மனைவி வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தளி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு விரைந்த போலீசார் மாரியம்மாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். வீட்டில் தன்னந்தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பள்ளபாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.