தயாரிப்பு செலவு அதிகரித்து தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் பணச் சுமை ஏற்படுவதால் திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மேலும், சில யூனியன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அதுவரை ஏற்கனவே தொடங்கப்பட்ட படங்களை தவிர்ந்து நவம்பர் 1ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் வேலைகளை துவக்க வேண்டாம் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.