உடுமலை அருகே மகளிர் சுகாதார வளாகம் திறக்க வலியுறுத்தல்!

68பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை
அருகே ஆண்டியகவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட பெரிசனம்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் இப்பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை திறக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி