உடுமலை: அரசு விழாவில் அமைச்சர் பெயர் புறக்கணிப்பு கண்டனம்!

63பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த 20ம் தேதி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் ஜல்லிக்கட்டு நினைவு சதுக்கம் தலைவர்கள் பூங்கா நீரோட்டம் பூங்கா அசோகா ஸ்தோபி
சந்திப்பு போன்றவை பராமரிக்கப்பட்டு
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் அப்போது நடைப்பெற்ற
அரசு விழாவில் அப்போதைய ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரும் தற்பொழுது மனிதவளத்துறை அமைச்சருமான கயல்விழி பெயர் அழைப்பிதழ் மற்றும் கல்வெட்டில் இடம்பெறவில்லை இது அமைச்சரின் ஆதரவாளர்களும் திமுகவினரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று அமைச்சர் கயல்விழி பெயர் கல்வெட்டில் போடப்படாத நிலையில் இன்று உடுமலை , தாராபுரம் , சென்னை போன்ற பல்வேறு இடங்களில் சமூக வலைதளங்களில் நகர மன்ற தலைவர் மத்தீன் மற்றும் அமைச்சர் சாமிநாதன் மீது புகார் தெரிவித்து திமுக தலைமைக்கு புகைப்படங்களுடன் அனுப்பப்பட்ட தகவல் வேகமாக பரவியது. இந்த நிலையில் தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் சாதிக்பாட்ஷா கூறும் போது. அரசு விழாவில் முன்னாள் அதிமுக அமைச்சர் பெயர் , திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் பத்மநாபன் பெயர் உள்ள நிலையில் தற்போதைய அமைச்சர் கயல்விழி பெயர் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி